SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாக். அத்துமீறி தாக்குதல் இந்திய வீரர் பரிதாப பலி

2018-11-11@ 01:39:56

ஜம்மு: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரின் ரஜோவ்ரி மாவட்ட எல்லைப் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. உடனடியாக இந்திய வீரர்களும் கடுமையான பதிலடி கொடுத்தனர். ஆனால், இந்த சம்பவத்தில் இந்தியா தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். இதேபோல், காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடுக்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரின் திகுன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், நேற்று காலை ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றிவளைத்தபோது, வீரர்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். நீண்டநேரம் நடந்த சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்