SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ம.பியில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

2018-11-11@ 01:38:34

போபால்: விவசாயிகள் பெற்ற ரூ.2 லட்சம் வரையிலான பயிர்கடனை தள்ளுபடி செய்வது, இளைஞர்களுக்கு ேவலை வாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையை மத்திய பிரதேச காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கில் காங்கிரஸ் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளது.

நேற்று போபால் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் 112 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்: வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை செய்துள்ளபடி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். 2.5 ஏக்கருக்கும் குறைவான விளைநிலம் கொண்ட 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் தற்போது வழங்கப்படும் ரூ.300 என்பதை ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும்.

விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன் தள்ளுபடி செய்யப்படும். வேளாண் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும், விவசாயிகளுக்கான மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளுக்கு வேலை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக அரசு வழங்கும். தொழிற்சாலைகள் அமைக்க முன்வருபவர்களுக்கு மானியம் மற்றும் ஜிஎஸ்டியில் கழிவு வழங்கப்படும். ஏழை குடும்பங்கள் பெறும் கேஸ்சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும், பட்டமேற்படிப்பு வரை சிறுமிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்