SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை ரத்து செய்தார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

2018-11-11@ 01:34:51

சரமா: ‘‘பிரதமர் மோடி தனக்கு வேண்டிய 15 தொழிலதிபர் நண்பர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்’’ என சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். சட்டீஸ்கரில் நாளை முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சட்டீஸ்கரின் சராமா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த சலுகைகள் விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும், பெண்களுக்கும், பழங்குடியினருக்கும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. மோடி 15 தொழிலதிபர்களை நம்புகிறார். நாங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களை நம்புகிறோம். சட்டீஸ்கரில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சிட்பண்ட் மோசடி நடந்துள்ளது. 60 பேர் இறந்துள்ளனர். 310 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் யாரும் சிறைக்கு செல்லவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என முதல்வர் ராமன் சிங் விரும்புகிறார்.

பொது விநியோகத்துறையில் ரூ.36 ஆயிரம் கோடி திருடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் ராமன் சிங்குக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. பனாமா பேப்பர்ஸில் இடம் பெற்ற தனது மகன் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என அவர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ராமன் சிங் ஆட்சிக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 40 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். 65 சதவீத நிலங்களுக்கு நீர்ப்பாசனம் இல்லை. பழங்குடியினரிடமிருந்து, 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டு முதல்வர்களின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு பதில், சட்டீஸ்கரில் அவுட்சோர்சிங் மூலம் வெளி மாநில இளைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவுட்சோர்சிங் பணி ஒழிக்கப்படும். நிலம் இல்லாத ஒவ்வொரு குடும்பத்துக்கும், நிலம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்