SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்தினால் புதுச்சேரிக்கு போய் குடித்து உடம்பை கெடுத்துப்பாங்க... ராஜேந்திரபாலாஜி சொல்கிறார்

2018-11-11@ 01:31:12

திருவில்லிபுத்தூர்: தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்தினால், மக்கள் புதுச்சேரிக்கு போய் குடித்து உடலை கெடுத்து கொள்வார்கள் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டி: தேர்தல் கூட்டணி அமைக்க அனைத்துக்கட்சி தலைவர்களும் முயற்சி செய்கின்றனர். அதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து, வெற்றி பெறுவதற்கான வியூகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.

2 ஆண்டு அல்ல. 2 ஆயிரம் ஆண்டு ஆனாலும் அதிமுக ஆட்சி தொடரும். இடைத்தேர்தல் நடக்காது என தங்கதமிழ்ச்செல்வன் கூறுகிறார். ஏதாவது குளறுபடி செய்து இடைத்தேர்தலை நிறுத்த நினைத்தால், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்காது. சாதாரண விவசாயி எடப்பாடி பழனிசாமி, நாட்டை ஆள்வதை பிடிக்காமல் ஒரு சிலர் சதி செய்கின்றனர். கமல் ஒரு தொகுதியில் ஜெயித்துவிட்டு அரசியல் பேசட்டும். பிக்பாஸ் போல அரசியலிலும் மீசையை முறுக்குகிறார். அது எடுபடாது. தமிழகத்தில் மது விற்பதை நிறுத்தினால் மக்கள் புதுச்சேரி அல்லது கர்நாடகத்திற்கு போய் குடித்து உடலை கெடுப்பர். மது விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்