SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாங்கண்ணியில் போலீஸ்காரர் தற்கொலை

2018-11-11@ 01:29:04

நாகை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிபட்டியை சேர்ந்தவர் விவேக் (25). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் மணிமுத்தாற்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்து அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.  மறுநாள் 9ம் தேதி காலை அங்குள்ள துணிக்கடையில் புது புடவை வாங்கிக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் விடுதி பணியாளர்கள் சந்தேகம் அடைந்து மேலாளர் அந்தோணி குரோஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு வந்த போலீசார் விடுதி அறை கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அறைக்குள், போலீஸ்காரர் விவேக் தான் வாங்கி வந்த புதிய சேலையால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விவேக் மேல் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக இறந்தாரா?, காதல் தோல்வியா? அல்லது குடும்ப பிரச்னையா என விசாரனை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்