SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி அருகே 10 மணி நேரமாக தவிப்பு கிணற்றுக்குள் விழுந்த ஆண் யானை போராடி மீட்பு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

2018-11-11@ 01:19:56

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானையை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்குட்பட்ட ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக் காட்டில் உள்ள யானைகள், அடிக்கடி ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட யானைகள் கடூர், தாண்டரகுண்டா வழியாக உப்புபள்ளம் பகுதிக்கு வந்து, பயிர்களை நாசம் செய்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், ராயக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினர். அப்போது, யானை கூட்டத்தில் இருந்து 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, வழிதவறி அருகில் உள்ள உப்புபள்ளத்தைச் சேர்ந்த பாப்பண்ணா என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

அந்த கிணற்றில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் விழுந்த யானை, வெளியே வர முடியாமல் அங்கும், இங்கும் ஓடியது. பின்னர், ஆக்‌ரோஷமாக பிளிறியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்த போது, கிணற்றுக்குள் யானை தத்தளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.  பின்னர், ராட்சத பொக்லைன் வரவழைக்கப்பட்டு, கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டு சாய்வான பாதை ஏற்படுத்தப்பட்டது. இரவு 10 மணி அளவில் தொடங்கிய இந்த பணி, நேற்று காலை 8 மணியளவில் நிறைவடைந்தது.

கிணற்றில் இருந்து வெளியே வர வழி ஏற்படுத்தியதும், யானை அந்த பாதை வழியாக மெதுவாக நடந்து கிணற்றில் இருந்து வெளியே வந்தது. கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்ததும் துதிக்கையை தூக்கி பிளிறியபடி ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி ஓடியது. அது தனது கூட்டத்தினருடன் சேர்ந்துவிட்டதா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ராயக்கோட்டை அருகே உணவுக்காக காட்டில் இருந்து வந்த யானை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதியில் உள்ள பாவாடரப்பட்டி என்னுமிடத்தில், கடந்த ஜனவரி மாதம் 3 மாத குட்டி யானை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டது, ஆனால் அந்த  குட்டியை கூட்டத்தில் சேர்க்காமல், மற்ற யானைகள் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்