SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு

2018-11-11@ 01:18:29

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 5,971 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6,038 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 2,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக உள்ளது. நீர் இருப்பு 64.85 டிஎம்சி. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்