SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு கண்டனம் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்வதே போலீசாரின் கடமை ஐகோர்ட் கிளை உத்தரவு

2018-11-11@ 01:17:24

மதுரை:  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐகோர்ட் கிளை, புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்வதே போலீசாரின் கடமை என கூறியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த ராமச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடக்கோரி, பட்டுக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாரை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2.8.2017-ல் பேராவூரணி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை போலீசார் நிறைவேற்றவில்லை.

அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேறொரு இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும். அவர் விசாரித்து 15 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென 17.11.2017ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் போலீசார் நிறைவேற்றவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யாத பேராவூரணி போலீசாரின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத செயலை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று வழக்குப்பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதே போலீசாரின் கடமை. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. எனவே, மனுதாரர் புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்