SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மீதான அன்பால் பன்றிக்காய்ச்சல் குறைந்தது செல்லூர் ராஜூ தகவல்

2018-11-11@ 01:13:33

மதுரை: ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான், இந்த ஆண்டு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் குறைந்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மதுரை பெத்தானியபுரத்தில் மாநகர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டு 3,500 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு 1,020 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,025 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். ஆக ஜெயலலிதா மீது மக்கள் கொண்ட அன்பினால்தான் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்திருக்கிறது’’ என்றார். எப்போதுமே முரண்பாடுடன் பேசும் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு மக்களிடையேயும், கட்சியினரிடையேயும் அதிரு ப்தியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்