SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் வேகமாக பரவுகிறது.. நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல்: மதுரை, சிவகங்கை, விருதுநகரில் 3 பேர் பலி

2018-11-11@ 01:12:13

சேலம்: சேலத்தில் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றார். மதுரை, சிவகங்கை, விருதுநகரில் 3 பேர் பலியாகினர். சேலம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டில் பன்றிக்காய்ச்சல் பாதித்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் பாதித்த 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் சூரமங்கலத்தை சேரந்தவர் நடிகர் சரவணன் (50). இவர், பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர் காய்ச்சல் காரணமாக, கடந்த 6ம் தேதி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் உறுதியானது. தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் நேற்று காலை சென்னை புறப்பட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தீபாவளியன்று எனக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், எனக்கு பன்றிக்காய்ச்சலின் முதல் கட்ட பாதிப்பான புளூ காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவுள்ளேன். விரைவில் குணமடைந்த பின்னர், படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன்,’ என்றார்.

சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன் கூறுகையில், ‘‘நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும், அவர் வசித்து வரும் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது’’ என்றார்.

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியை சேர்ந்த பாண்டி மகன் தரணிதரன்(11). ஆறாம் வகுப்பு மாணவனான இவன், விபத்தில்  காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் சேர்க்கப்பட்டான். அங்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டது. பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் தரணிதரன் இறந்தான்.

சிவகங்கை: சிவகங்கையை சேர்ந்தவர் ரகுராமன் (50). எல்ஐசி கிளையில் முதுநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மதுரை தனியார் மருத்துவ மனையில் பன்றிக்காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை ரகுராமன் இறந்தார்.

விருதுநகர் பெண் பலி : விருதுநகர் மாவட்டம் பெத்தனாட்சி நகரை சேர்ந்த சுந்தராஜன் மனைவி மீனாட்சி(47). பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பலியானார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்