SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் வெளியில் வந்துள்ளது தமிழிசை சொல்கிறார்

2018-11-11@ 01:09:33

சென்னை: பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையால், நாட்டில் கருப்பு பணம், வரைமுறையற்ற பணம் மற்றும் கணக்கு காட்டாத பணம் வெளியில் வந்து உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை மாநகர பாஜ கட்சி சார்பில், பணம் மதிப்பிழப்பின் நன்மை குறித்த கருத்தரங்கம் வேளச்சேரியில் நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட, புரட்சிகர செயல்தான் பணம் மதிப்பு இழப்பு. இதன்மூலம் கருப்பு பணம், வரைமுறையற்ற பணம், கணக்கு காட்டாத பணம் வெளியில் வந்துள்ளது.

எதிர்க்கட்சிகள், போலி நிறுவனங்கள் மற்றும் கள்ளப்பணத்தை தீய சக்திகளுக்காக பயன்படுத்துபவர்கள் பணம் மதிப்பு இழப்பை தவறாக சித்தரிக்கின்றனர். நாட்டில் கணக்கு காட்ட வேண்டும், வரிகட்ட வேண்டும் என்கிற உயரிய எண்ணம் மக்கள் மத்தியில் வந்துள்ளது. மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்தால், அவர்களுக்கு 15 பைசாதான் கிடைப்பதாக ராஜிவ்காந்தி கூறினார். ஆனால் இந்த காலக்கட்டத்தில் மக்களின் பணம் மக்களுக்கே என்கிற நிலை உருவாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு மக்களுக்காக வாங்கிய ரூ.70 ஆயிரம் கோடியை அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்களின் கூட்டணியால், அடுத்து அமைய இருக்கும் மோடி ஆட்சியை தடுக்க முடியாது. இவ்வாறு தமிழிசை பேசினார். கருத்தரங்கில் பொருளாதார நிபுணர்கள் சேகர், வெங்கட்ராமன் மற்றும் பாஜ  நிர்வாகிகள் நாராயணன், தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்