SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்உற்பத்தியில் உலகிலேயே 5வது மாநிலமாக உள்ளது தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

2018-11-11@ 01:07:13

சென்னை: மின்உற்பத்தியில் உலகிலேயே 5வது மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும், எனவே இங்கு தொழில் முதலீடு செய்ய வாருங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றம் ஆகியவை இணைந்து இந்தியாவில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்று மற்றும் புதிய நிதி ஏற்பாடுகள் பற்றிய வட்ட மேஜை மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. ஐக்கிய பொருளாதார மன்ற தலைவர் ஆரிப் புஹாரி வரவேற்றார்.

மாநாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வலுவான உறவு இருந்து வருகிறது. 90க்கும் மேற்பட்ட மலேசிய கம்பெனிகள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் உள்ள உறவு வரும் நாட்களில் மேலும் வலுப்பட வேண்டும். இன்று இங்கு தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் இங்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவிலேயே தமிழகம் உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இங்கு படித்த திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள். தமிழகம் தொழில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள ஒரு சிறந்த இடம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிக தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான நிர்வாகம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தொழில் துவங்க குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிங்கிள் விண்டோ கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், பம்புகள், மோட்டார்கள், ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தி, தோல் தொழிற்சாலைகள், ரசாயன மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்ந்த அளவாக 7000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் உள்ளது. காற்றாலை மின்உற்பத்தி திறனில், உலகிலேயே 5வது மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்று தமிழகம் மின்உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்கிறது. தொழில் முதலீடு செய்ய தமிழகம் உகந்த மாநிலமாகும்.தமிழகத்தில் உள்ள கட்டமைப்பு வசதியானது. முதலீடுகள், நிதி மூலதனம் போன்றவற்றை ஈர்ப்பதாக உள்ளது. தமிழகத்தில் செய்யும் முதலீடுகள் மிக சிறந்த முதலீடாக இருக்கும் என்பதை நான் உறுதியுடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் நம்பகத்தன்மை உடைய, கடுமையாக பணியாற்றும் நபர்களால் செய்யப்படும் முதலீடு இதுவாகும். மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழகத்தின் மனித வளம் முக்கியபங்காற்றுகிறது. வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான குறிக்கோள்மிக்க எங்களது பயணத்தில் நீங்கள் இணைந்து கொண்டு, தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், உலக இஸ்லாமிய பொருளாதார மன்ற தலைவர் மூசா ஹிடேம் ஆகியோரும் மாநாட்டில் பேசினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்