SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ரூ.5, டாக்சி ரூ.10 ஆக கட்டணம் குறைப்பு

2018-11-11@ 01:04:51

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி ஆகியவற்றின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவை சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பயணிகள் விரைவாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஷேர் டாக்சி சேவைக்கான கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம், நாளை(நவம்பர் 12ம் தேதி) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 47,628 ேபர் ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், 21,590 பேர் ஷேர் ஆட்டோ சேவையையும், 6,442 பேர் ஷேர் டாக்சி சேவையையும் பயன்படுத்தியுள்ளனர்.    

கோயம்பேடு, ஆலந்தூர் ரயில் நிலையங்களில் மட்டும், 7,561 பேர் இந்த சேவைகளை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு சேவைகளை பயணிகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குறைந்த விலையில் ஷேர் டாக்சி சேவை வழங்கப்படுவதால், தங்களின்  தினசரி வருமானம் பாதிக்கப்படுவதாக, பிற தனியார் கால் டாக்சி நிறுவன  ஊழியர்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷேர் டாக்சி சேவைக்கு எதிர்ப்பு  தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த இரு சேவைகளுக்கான கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்