SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.15 கோடி நிலுவை தொகை வழங்க கோரி விமானப்படை ஒப்பந்ததாரர்கள் போராட்டம்: கிழக்கு தாம்பரத்தில் பரபரப்பு

2018-11-11@ 01:01:03

சென்னை : தாம்பரம் இந்திய விமானப்படை ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.15 கோடியை உடனே வழங்க கோரி கிழக்கு தாம்பரத்தில் விமானப்படை தளத்தின் நுழைவு வாயில் முன்பு  நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா முழுவதும் விமான படையில் 8 ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை, பிளம்பிங், கழிவுநீர் எடுத்தல், தண்ணீர் வழங்குதல், எலக்ட்ரிக் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1600 கோடி தொகை வழங்காமல் நிலுவையில் இருந்தது.   

தீபாவளிக்கு முன்னதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அனைத்து இந்திய மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் முதன்மை துணை தலைவர் அஷீஸ் உல்லா கான் தலைமையில் ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவை தொகை வழங்குவது குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  பேச்சுவார்த்தையை தொடர்ந்து ₹ 250 கோடி வழங்கியுள்ளனர். இந்த ரூ.250 கோடியில் ஒரு சில மாநிலங்களுக்கு அதிகமான தொகையை வழங்கி விட்டு ஒரு சில மாநிலங்களுக்கு வழங்கவில்லை என தாம்பரம் இந்திய விமானப்படை ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டினர்.

குறிப்பாக தாம்பரம் இந்திய விமானப்படைக்கு வர வேண்டிய ரூ.15 கோடி தொகையை வழங்காமல் ரூபாய் 26 லட்சம் மட்டுமே வழங்கியதால் ஒப்பந்ததாரர்கள் வாங்க மறுத்து கடந்த திங்கட்கிழமையில் இருந்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானபடையில் ஒப்பந்ததாரர்கள் கீழ் பணிபுரியும் சுமார் 500 ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று  கிழக்கு தாம்பரம் ஒப்பந்ததாரர்கள் அனைத்து இந்திய மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் சென்னை கிளை சார்பில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளம் நுழைவு வாயில் முன்பு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்