SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை கண்டித்து திருச்சியில் கருஞ்சட்டை பேரணி: திருமுருகன் காந்தி பேட்டி

2018-11-11@ 00:59:33

சென்னை: ‘‘ஆர்எஸ்எஸ் மற்றும் மத்திய பாஜ அரசை கண்டித்து, திருச்சியில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நடக்கிறது’’ என, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்தார். சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து வரும் ஜாதி வெறி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக பெரியாரிய இயக்கங்கள் போராடி வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சியில் வரும் டிச, 24ம் தேதி கருஞ்சட்டை அணிந்து பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படுகிறது.
பெரியாருடை கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். பாஜ, ஆர்எஸ்எஸ்-ன் இந்து மத வெறியையும், ஜாதி வெறியை எதிர்த்தே, நாங்கள் இந்த பேரணியை நடத்துகிறோம்.

பெரியார் கருத்தை கொச்சைப்படுத்துவதற்காகவே, அவரது சிலைகள் உடைத்து, வன்முறை அரசியலை இந்துத்துவா அமைப்புகள் முன்வைக்கிறது. அதை எதிர்க்கும் விதமாகவே இந்த மாநாடு நடக்கிறது. வெளிப்படையாகவே உடைப்போம் என்று கூறுவோர் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கலவரபூமியாக தமிழகத்தை மாற்ற இந்துத்துவா அமைப்புகள் மாற்ற முயற்சித்து வருகிறது. நாங்கள் பாஜ ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்