SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் சந்திக்காவிட்டால் போராட்டம் சத்துணவு ஊழியர்கள் எச்சரிக்கை

2018-11-11@ 00:57:48

சென்னை: முதல்வர் எடப்பாடி சந்திக்க மறுத்தால் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் எச்சரித்துள்ளனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், எம்ஜிஆர் சத்துணவு பேரவை, தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முறையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி திட்டத்திற்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு கூட்டமைப்பின் பொறுப்பாளர் வரதராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல்வரை சந்திக்க முடிவு செய்திருக்கிறோம்.

அப்போது அவர் சந்திக்க மறுத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுவரை எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, 9 மாத காலம் கொடுப்பது போல, சத்துணவு துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு, 9 மாத காலமாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்