SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திரபாபு நாயுடு சந்தித்த நிலையில் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சந்திப்பு ராகுலை விரைவில் சந்திப்பார் என தகவல்

2018-11-11@ 00:56:27

சென்னை: சந்திரபாபு நாயுடு சந்தித்த அடுத்த நாளே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஸ்டாலினை நேற்று காலை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேச காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று காலை 9.15 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சஞ்சய் தத் கூறுகையில், ‘‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து கூட்டணி குறித்து ேபச வாய்ப்பு உள்ளது’’ என்றார். ஸ்டாலினை, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினார். நேற்று சஞ்சய் தத் சந்தித்துப் பேசியுள்ளார். அடுத்தடுத்து, ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்