SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த 5 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தகவல்

2018-11-11@ 00:51:36

சென்னை: அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு நாளை முதல் 5 நாட்கள் வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியோரின் நலன்களை காக்கும் நோக்கிலும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் வகையிலும் அந்த மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் விதிகள் வெளியிடப்பட்டது.

இந்த விதிகளில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க ஆறு மாத காலக்கெடு 3.11.2017 வரை நிர்ணயிக்கப்பட்டது. பிறகு அந்த காலக்கெடு 3.11.2018 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க கடைசி நாளான 3.11.2018 சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாக இருந்தது. மேலும் 6.11.2018 வரை தீபாவளி  விடுமுறை நாட்களாக இருந்தது.

அதனால், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த குறுகிய கால வாய்ப்பு கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படியே அரசு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பங்களை இணையதளம் (www.tnlayoutreg.in) வழியாக 12.11.2018 முதல் 16.11.2018 வரை 5 நாட்களுக்கு அனுமதி அளிக்க முடிவுசெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்