SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2018-11-11@ 00:42:12

சென்னை: ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, தமிழக கவர்னர் உரையாற்றுவார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 2வது வாரம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டும் வருகிற ஜனவரி மாதம் 2வது வாரம் சட்டப்பேரவை கூட்டம் கூடும். கூட்டத்தின் முதல் நாள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார்.முன்னதாக கடந்த மே மாதம் 29ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 9ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக நவம்பர் அல்லது ஜனவரி மாதம் குளிர்கால கூட்டம் நடைபெறும். அதேநேரம், 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று விதி உள்ளது.

தற்போது, இறுதியாக ஜூலை 9ம் தேதி வரை கூட்டம் நடைபெற்றதால் 6 மாதம் இடைவெளி விட்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது. காரணம், திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ளார். இது ஜனவரி மாதம் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த தீர்மானத்துக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் உடனடியாக வாக்கெடுப்புக்கு விடப்படும்.

அதேபோன்று, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதி மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்படும். முன்னதாக இந்த கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் திமுக தலைவர் மறைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கவும் அதிக வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்