SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் அதிகாரியிடம் சில்மிஷம் ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறை

2018-11-11@ 00:40:57

சென்னை: பெண் அதிகாரியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (36). ராணுவ வீரரான இவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிசியோதெரபி பிரிவில் உள்ள டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மைய பெண் பயிற்சி அதிகாரி, கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, இந்த ராணுவ மருத்துவமனையில் பிசிேயாதெரபி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு, பிரகாஷ் சிகிச்சை அளித்தபோது, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண் அதிகாரி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ராணுவ உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். விசாரணையில், பிரகாஷ், சில்மிஷம் செய்தது உறுதியானது.

இதுபற்றிய அறிக்ைக பரங்கிமலையில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிரகாஷுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து தென்மண்டல ராணுவ கமாண்டர் உத்தரவின்பேரில், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை முதன்மை பதிவாளர் கர்ணல் ஜேக்கப் என்பவர், ராணுவ வீரர் பிரகாஷை நேற்று பணிநீக்கம் செய்து, 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை நிறைவேற்றுமாறு நந்தம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிந்து பிரகாஷை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். இச்சம்பவம் ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்