SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிப்பாய் புரட்சி ஆவணப்படம் வெளியீடு சென்னையில் நடந்தது

2018-11-11@ 00:35:53

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் திப்பு ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் சிப்பாய் புரட்சி ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அ.முஹைதீன் அப்துல் காதர், எம்.நாகூர் மீரான் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முஹம்மது பயாஸ் வரவேற்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் கி.பி 1806- வேலூர் சிப்பாய் புரட்சி ஆவணப்படத்தை வெளியிட்டார். தமிழக அரசு அருங்காட்சியகத்துறை முன்னாள் துணை இயக்குனரும், இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மையம் இயக்குனருமான ஜெ.ராஜா முஹம்மது பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி எம்.முஹம்மது முஸ்தபா, என்.சி.ஹெச்.ஆர்.ஒ.  தேசிய தலைவர் அ.மார்க்ஸ், அ.குமரேசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, ரியாஸ் அஹமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமுதாய தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ராஜா தொகுத்து வழங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தென்  சென்னை மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மது நாஜிம் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

  • bangladeshfire

    வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்