SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புராதன சின்னங்கள் பாதுகாப்பது குறித்து கோயில் செயல் அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு தொடக்கம்: 150 பேருக்கு இரண்டு கட்டங்களாக நடக்கிறது

2018-11-11@ 00:34:34

சென்னை: புராதன நினைவு சின்னங்கள் பாதுகாப்பு, புனரமைப்பு குறித்து கோயில் செயல் அலுவலர்களுக்கு நாளை  முதல் பயிற்சி வகுப்பு நடக்கிறது.  இந்து அறநிைலயத்துறை கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள் உள்ளன. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் தொன்மை மாறாமல் பாதுகாக்கும் வகையில் பல்ேவறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் புராதன நினைவு சின்னங்கள் புனரமைப்பு என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் செயல் அலுவலர்களுக்கு 2 வாரம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு கோயிலில் பணிபுரியும் செயல் அலுவலர்களுக்கு நாளை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

இந்த பயிற்சி வகுப்பை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரையாற்றுகிறார். இந்த வகுப்பில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சி வகுப்பு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. ஒரு அணிக்கு 25 செயல் அலுவலர்கள் வீதம் 6 அணிகளாக மொத்தம் 150 செயல் அலுவலர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் புராதன சின்னங்களை பாதுகாப்பு குறித்து தொல்லியல் துறை வல்லுனர்கள், பொறியாளர்கள் ஆகியோர் செயல் அலுவலர்களுக்கு பாடம் நடத்துகின்றனர். தொடர்ந்து இந்த பயற்சியில் கலந்து கொள்ளும் செயல் அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்