SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு

2018-11-11@ 00:31:54

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை, ஆளுநருக்கு பரிந்துரைக்க, மகாராஷ்டிர மாநிலம், கிரிஷி வித்யாபீட துணைவேந்தர் விஸ்வநாதா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து, வேளாண் துறை அரசாணை பிறப்பித்தது. வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்கு, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், 10 ஆண்டுகள் பேராசிரியராகவும், 6 ஆண்டுகள் நிர்வாக பணியையும், 10 ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கல்வித் தகுதியை நிர்ணயித்து கடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், துணைவேந்தர் பதவிக்கு  தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பணிக்கு விண்ணப்பித்த வள்ளுவ பாரிதாசன் என்ற பேராசிரியர், தன்னை நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை என்றும் அதனால் நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி விமலா முன் விசாரணைக்கு வந்த போது, அரசு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியைப் பெற்றுள்ள தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், விண்ணப்பித்த 55 பேரில் இருந்து அதிக தகுதி படைத்த 11 பேரை நேர்முக தேர்வுக்கு அழைத்துள்ளதாகவும், மனுதாரர் தன்னை அழைக்க வேண்டும் என உரிமை கோர முடியாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைப்பதற்கான நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்