SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 6 பேர் கைது

2018-11-11@ 00:29:32

சென்னை: காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஐஸ்ஹவுஸ், லாயிட்ஸ் ரோடு, துலுக்கானத்தோட்டத்தை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அப்பாஸ் (42). இவர், மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர், கடந்த மாதம் 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் நின்று கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை வெட்டிக்கொலை செய்யப்பட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான இம்ரானுதீன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில், தனது மனைவியை அபகரித்ததால் நண்பர் அப்பாஸை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தாவூத் (24), இம்தியாஸ் (30), கல்லறை ஜான் (27) உட்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்