SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருமுடியில் வெடிகுண்டுகளை எடுத்து வந்து சபரிமலை கோயிலை தகர்க்க தீவிரவாதிகள் சதி: எஸ்பி.க்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

2018-11-11@ 00:28:03

திருவனந்தபுரம்: இருமுடியில் வெடிகுண்டுகளை எடுத்து வந்து சபரிமலை ஐயப்பன் கோயிலை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்தால் எச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்பி.க்களுக்கும் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டுள்ளார். இதனால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல - மகரவிளக்கு காலங்களில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கோயிலுக்கு மேலும் அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனறு மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரிக்ைக விடுத்துள்ளன. உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா, கேரளாவின் அனைத்து மாவட்ட எஸ்பி.களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. காட்டுக்குள் இருக்கும் கோயில் என்பதாலும், வனப்பகுதி வழியாக நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும் பக்தர்கள் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் கடல் பகுதி வழியாக தீவிரவாத இயக்கத்தினர் வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் கடத்துகின்றனர். எனவே, கடலோர மாவட்டங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

சபரிமலை சீசன் நேரத்தில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை உளவுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து மாவட்ட போலீசாரும் கண்காணிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பிற மாநில உளவுத்துறை அமைப்புகளின் உதவியையும் நாட வேண்டும். பம்பை, சன்னிதானத்தில் போலீஸ் தனிப்பிரிவு மற்றும் உளவுப்பிரிவு டிஎஸ்பி.க்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் தான் ெபரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். தீவிரவாதிகளும் கோயிலை தகர்க்க இதுபோல் இருமுடி கட்டில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து எடுத்து வர வாய்ப்பு உண்டு. எனவே, சந்தேகப்படக் கூடிய நபர்களின் இருமுடி கட்டுகளை திறந்து சோதனை செய்ய வேண்டும்.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டு தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளும் சபரிமலை வர வாய்ப்பு உண்டு. இது தவிர குடிநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கோயில் வளாகம், மாளிகைப்புறம் கோயில், பம்பை கணபதி கோயில், வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டிராக்டர்கள் மூலமாகதான் கோயில், கடைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இப்படி கொண்டு செல்லப்படும் பொருட்களையும் பரிசோதிக்க வேண்டும். காக்கி பேன்ட் அணிந்து வருபவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும். சபரிமலை அருகே உள்ள அணைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசாரை ஏமாற்றி காட்டு வழியே சபரிமலை சென்ற பாஜ நிர்வாகிகள்
சபரிமலையில் சித்திரை ஆட்டத் திருநாளின்போது வன்முறைகளை தடுக்க போலீசார் தீவிர  நடவடிக்கைகளை எடுத்தனர். பக்தர்கள் அல்லாதவர்களையும் பாஜ., ஆர்எஸ்எஸ்  மற்றும் இந்து அமைப்பினரையும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று  போலீசார் உறுதியாக இருந்தனர். இதனால் நிலக்கல், இலவுங்கல், எருமேலி, பம்பை  உட்பட பல இடங்களில் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதித்த பிறகே  சபரிமலைக்கு அனுமதித்தனர். பா.ஜ. மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள்  சன்னிதானத்திற்கு வந்தால் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று  உளவுத்துறையும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பாஜ. பொதுச்செயலாளர்  சுரேந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் சன்னிதானம் செல்ல திட்டமிட்டிருப்பதாக  ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தடுக்க, அவரை பழைய வழக்கில் கைது  செய்யவும் திட்டமிட்டனர். இதை அறிந்த சுரேந்திரன் உட்பட 9 பேர் கடந்த 4ம்  தேதி இரவு முண்டக்கயம் வழியாக சபரிமலை வனப்பகுதிக்குள் நுழைந்தனர். அது  கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதியாகும். அங்குள்ள ஆதிவாசி  மக்கள் துணையுடன் 15 மணி நேரம் காட்டிற்குள் நடந்து மறுநாள் 5ம் தேதி  மதியம் மரக்கூட்டத்தை அடைந்தனர். புறப்படும்ேபாதே முண்டக்கயத்தில் இருமுடி  கட்டும் கட்டினர். சுரேந்திரன் தலைமையில் பாஜ., நிர்வாகிகள்  சன்னிதானத்திற்கு வந்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அவரை  கைது செய்ய முயன்றனர். ஆனால், பக்தர்கள் திரண்டதால் போலீசாரால் ஒன்றும்  செய்ய முடியவில்லை.

பெண்களை தடுத்தது தவறான நடவடிக்கை
சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை: அதில், ‘ஐப்பசி மாத பூஜையின் போதும் சித்திரை ஆட்டத்திருநாள்் பூஜையின்போதும் இளம் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.  மண்டல-மகரவிளக்கு காலத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். தற்போதைய சூழ்நிலை அப்ேபாதும் தொடர்ந்தால் நிலைமையை சமாளிக்க முடியாது. உயிர் இழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சபரிமலை கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனவே, வரும் காலங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். பெண்களை தடுத்தது தவறான நடவடிக்கை. சிலர் இருமுடி கட்டு இல்லாமல் 18ம் படி ஏறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்