SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்வள நிலவள திட்ட அறிக்கை தயாரித்ததில் குளறுபடி 1511 ஏரிகள் புனரமைப்புக்கு 328 கோடி, 1325 ஏரிகளுக்கு 743 கோடியா?

2018-11-11@ 00:09:07

* லட்சக்கணக்கில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார்
* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகள் செய்யும் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு 328 கோடியும் நீர்வளநிலவளதிட்டத்தில் கான்ட்ராக்டர் செய்யும் 1325 ஏரிகளுக்கு 743 கோடியும் ஒதுக்கீடு செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளநிலவள திட்டத்தில் ஏரிகள் புனரமைப்பு பணிக்காக திட்ட அறிக்கை தயாரித்ததில் குளறுபடி நடந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை மூலம் விவசாயத்தை பெருக்கும் வகையில், பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நீர், நில வளத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் இரண்டாவது கட்டமாக உலக வங்கி நிதியுதவியின் கீழ் ₹3 ஆயிரம் கோடி செலவில் 4,778 ஏரிகள், 477 அணைகட்டுகளை புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக 1325 ஏரிகள் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்து உலக வங்கிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 22 மாவட்டங்களில் 1325 ஏரிகளை புனரமைக்க 743 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உலக வங்கிக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. இந்த ஏரிகளில் 500க்கும் மேற்பட்ட ஏரிகள் கடந்த கால நீர்வளநிலவள திட்ட பணிகளில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டவை. இருப்பினும் இந்த ஏரிகளையும் புனரமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கைக்கு உலக வங்கியும் ஒப்புதல் அளித்தது. இதை ெதாடர்ந்து தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், திட்ட அறிக்கை தயாரித்ததில் பெரும் குளறுபடி நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, இந்த திட்ட அறிக்கையில் ஒவ்வொரு ஏரி புனரமைப்பு பணிக்கு லட்சக்கணக்கில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1511 ஏரிகளை புனரமைக்க 328 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் தூர்வாருவது மட்டுமின்றி, வரத்து கால்வாய்களை பராமரித்தல், மதகுகள், மிகை நீர் கலிங்குகள் மறு கட்டுமானம் செய்தல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளுக்கு ₹300 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 1325 ஏரிகளின் கரைகளை பலப்படுத்துவது, ஆழப்படுத்துவது உள்ளிட்ட புனரமைப்பு பணிக்கு 743 கோடி பணிக்கு ஒதுக்கீடு செய்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட முடிவு செய்து இருப்பது பொறியாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்