SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50 சதவீத ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை திணறும் கோவை தொழிற்கூடங்கள்

2018-11-11@ 00:07:24

கோவை: 50 சதவீதம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை காரணமாக கோவை தொழிற்கூடங்கள் திணறுகின்றன.  சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் பெருநகரமான கோவையில் 50 ஆயிரம் லேத் ஒர்க் ஷாப்கள், 5 ஆயிரம் சிஎன்சி மெஷின் ஒர்க் ஷாப்கள், 500 பவுண்டரி ஆலைகள், 800 பம்புசெட் நிறுவனங்கள், 600 ஆட்டோமொபைல் நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் ஆலைகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை தொழில் நிறுவனங்கள் என தொழில்வளம் நிறைந்துள்ளது. தொழில்துறையின் முன்னணி மாவட்டமாக இருப்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும்  பஞ்சாலை, இன்ஜினீயரிங், லேத் ஒர்க் ஷாப்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுனங்களில் தொழிலாளர் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடி வந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், தற்போது ஸ்கில்டு லேபர்களை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஸ்கில்டு லேபர்களை பயன்படுத்தி ெமஷின்களை இயக்கும்போது உற்பத்தி திறன் ெபருமளவு அதிகரிக்கும். சாதாரண ஊழியர்களால் அந்த அளவுக்கு நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது. ஸ்கில்டு லேபர் தட்டுப்பாடு காரணமாக ஆலை உற்பத்தியில் 30-40 சதவீதம் ெதாய்வு ஏற்படுவதாக தொழில்முனைவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி கோவை தொழில்முனைவோர் கூறியதாவது:
ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்பு படிக்காமல் நேரடியாக ஸ்கில்டு லேபர்களை உருவாக்க முடியாது. சாதாரண ஊழியர்களை வைத்து இயந்திரங்களை இயக்கினால் கை, கால்களை காயப்படுத்திக்கொள்ள நேரிடும். கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இன்றுவரை ெதாடர்ச்சியாக 18 ஆண்டுகளாக ஸ்கில்டு லேபர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இன்றைய நிலவரப்படி, கோவையில் உள்ள பல்வேறு ஆலைகளில் ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் ஸ்கில்டு லேபர் பற்றாற்குறை உள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களை இயக்கும் சிறு முதலாளிகள் உற்பத்தியை பெருக்க முடியாமல் திணறுகின்றனர். ஏற்கனவே, மின்வெட்டு, மூலப்பொருள் விலை உயர்வு, வங்கி கடன் நெருக்கடி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என பல தொல்லைகளில் சிக்கி தவிக்கும் ெதாழில்முனைவோரை தற்போது ஆள் பற்றாக்குறையும் ஆட்டிப்படைக்கிறது.

ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது என்ற பிரச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். அரசுத்துறை ஐடிஐ.க்களில் போதிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். இதேபோல், தனியார்துறை ஐடிஐ.க்கள் நிறைய திறக்க அனுமதி வழங்கவேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை தீரும். இவ்வாறு தொழில்முனைவோர் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்