SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-11-11@ 00:07:17

முதலாம் உலகப் போர் நிறைவு தினம்:
முதலாம் உலகப் போர் நிறைவடைந்து இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி முடிவுக்கு வந்த இந்தப் போரில், இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த படை வீரர்கள் 72,396 பேர் பிரான்சின் சோம்மி பகுதியில் பலியாயினர். அவர்களின் நினைவாக 72,396 நினைவு பொம்மைகளை வைத்து இங்கிலாந்து கலைஞர் ராப் ஹெரார்ட் அஞ்சலி செலுத்தி உள்ளார். லண்டன் ராணி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் நடந்த இந்நிகழ்வில் ராணுவ வீரர்பொம்மைகளுக்கு மத்தியில் ராப் ஹெரார்ட் நிற்கிறார்.

கடல் சிங்கங்களை கொன்றதால் சிறை:
அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் அழிந்து வரும் உயிரினமான கடல் சிங்கங்களை வேட்டையாடிய 2 மீனவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இரு மீனவர்களுக்கும் முறையே 5 மற்றும் 4 ஆண்டு சிறை, 3 மற்றும் 1 மாத வீட்டுக்காவல், தலா 400 மணி நேர சமூக சேவை மற்றும் 16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீறிப்பாயும் படகுகள்:
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சுற்றுலா தலமான கீ வெஸ்ட் தீவில் அதிவிரைவுப் படகுப் போட்டி நடந்தது. இதில் சீறிப்பாயும் சூப்பர் படகுகள்.

நடனத்திற்கு முன் செல்பி:
கியூபாவின் ஹனாவாவில் 26வது சர்வதேச பாலட் திருவிழாவையொட்டி, பாரம்பரிய பிளமென்கோ நடனம் நடந்தது. இதில் நடனமாடிய பெண்கள், நிகழ்ச்சிக்கு முன்பாக செல்போனில் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

கடலில் மலர் தூவி அஞ்சலி:
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 189 பேரும் பலியாயினர். விமானம் மூழ்கியதாக கருதப்படும் தஞ்சங் கராவங்க் பகுதியில், பலியானவர்களின் உறவினர்கள்  கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்