SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிவிஎஸ் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிசன்

2018-11-11@ 00:07:10

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு- சிவப்பு மற்றும் கருப்பு - நீலம் என இரண்டு புதிய வண்ண தேர்வுகளில் கிடைக்கும். டிசைனில் மாற்றங்கள் எதுவும் இல்லை.  புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர், ஸ்டைலான சைடு மிரர்கள், முப்பரிமாண அமைப்பில் டிவிஎஸ் பிராண்டு சின்னம் ஆகியவையும் இந்த புதிய மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன. இந்த ரக பைக் மாடல்களில் முதல்முறையாக சிங்ரொனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் முதல் மாடலாகவும், டிவிஎஸ் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 99.7 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் அலுமினியம் கிராப் ரெயில், கிரோம் மப்ளர் கார்டு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
இப்புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வருகை தந்தாலும், சாதாரண டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் 40,088 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மிக குறைவான பட்ஜெட்டில் சிங்ரொனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வண்ண தேர்வுகள் இந்த பைக்கிற்கு நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் என்கிறது டிவிஎஸ் நிறுவனம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்