SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய போக்ஸ்வேகன் டி - கிராஸ்

2018-11-11@ 00:06:59

புதிய போக்ஸ்வேகன் டி கிராஸ் கார், இரண்டு விதமான வீல் பேஸ் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலாகவும், இந்தியா உள்ளிட்ட வளரும் கார் சந்தைகளில் குறைவான வீல் பேஸ் கொண்ட மாடலாகவும் செல்ல இருக்கிறது. வென்ட்டோ காருக்கு பதிலாக வர இருக்கும் புதிய போக்ஸ்வேகன் விர்டஸ் செடான் கார் உருவாக்கப்பட்ட அதே MQB A0 பிளாட்பார்மில்தான் இந்த டி கிராஸ் எஸ்யூவி ரக காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 8 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.2 அங்குல திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களுடன் வருகிறது.

இப்புதிய போக்ஸ்வேகன் டி கிராஸ் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த இன்ஜின் 94 பிஎச்பி பவரையும், 114 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இரண்டுவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும் வருகிறது. 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 7 ஸ்பீடு டியூல் கிளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். வரும் 2020-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான சாய்ஸாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்