SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 6 மாதங்களாக காத்திருப்பு: விண்ணப்பித்தவர்கள் வேதனை

2018-11-11@ 00:06:52

வேலூர்: தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 6 மாதமாகியும் அழைப்பு இல்லாததால் விண்ணப்பித்தவர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அந்தந்த மாவட்டங்களில் காலி பணியிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 5,018 காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு 6 மாதங்களாகியும், நேர்காணல் நடத்தப்பட்டும், இதுவரை கால்நடை பாராமரிப்பு துறையினர் சார்பில் இன்னும் அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை.

மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் பணி நியமனம் பெற்றுத் தருவதாக கூறி 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணத்தை வசூல் செய்துள்ளனர். ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துறை சார்பில் நேர்காணலுக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால் விரைவில் நேர்காணல் நடக்கும் என எதிர்பார்க்ககப்படுகிறது. முறையான அறிவிப்பு வந்தவுடன் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு கடிதம் வழங்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்