SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மத்திய அரசு விற்பனை செய்த 30 லட்சம் எல்இடி பல்புகள் வாங்கியவர்கள் ஏமாற்றம்: 3 ஆண்டு வாரண்டியை செயல்படுத்தாமல் கைவிரிப்பு

2018-11-11@ 00:06:47

வேலூர்: தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்ட 30 லட்சம் எல்.இ.டி. பல்புகளுக்கு 3 ஆண்டுகள் வாரண்டியை செயல்படுத்தாமல் அதிகாரிகள் கைவிரிப்பதால், பல்புகளை வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மின்சிக்கனத்துக்காக, மத்திய அரசின் உஜாலா திட்டத்தில் மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான, டெண்டர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் ஒரு சில மின்வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்தும் கவுன்டர்களுக்கு அருகே ₹70க்கு எல்.இ.டி. பல்பு, 230க்கு எல்.இ.டி. டியூப்லைட், மின்விசிறி ஆகியன விற்பனை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் எல்.இ.டி. பல்புகள் விற்பனை செய்யப்பட்டதால் கடந்த ஜூலை மாதம் முதல் மலிவு விலை எல்.இ.டி. பல்புகள் விற்பனை நிறுத்தப்பட்டது. எல்.இ.டி. பல்புகளுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் வாரண்டியையும் செயல்படுத்தாமல் விட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மின்வாரிய அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும் எல்.இ.டி. பல்புகளுக்கு 3 ஆண்டுகள் வாரண்டி அளிக்கப்பட்டது. அதன்படி, பல்புகள் பழுதானால் தலைமை அஞ்சலகம், இந்துஸ்தான் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பழுதான ஒரு சில பல்புகள் மாற்றுவதற்கு கொண்டு சென்றால், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ‘எங்களுக்கு இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லை’ என்று பதிலளிக்கின்றனர்.

பல்புகளின் அட்டை பெட்டியின் மீதுள்ள இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டாலும், தலைமை அஞ்சலகத்தில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றே பதிலளிக்கின்றனர். 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கிவிட்டு, பொதுமக்களை அலைக்கழிப்பது எந்தவிதத்தில் நியாயம்’ என்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மின்வாரிய அலுவலகங்களில் எல்.இ.டி பல்புகள் விற்பனை செய்யப்பட்டாலும், மின்வாரிய துறை எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்க முடியாது. தனியார் நிறுவனம்தான் இதற்கு பொறுப்பு’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்