SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் பைகள் வரவால் நலிவடைந்த சாக்குகள் உற்பத்தி: வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

2018-11-11@ 00:06:42

பாவூர்சத்திரம்: பிளாஸ்டிக் பைகள் வரவால் சாக்கு உற்பத்தி மற்றும் விற்பனை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் நிலவுகிறது.  நெல்லை  மாவட்டத்தில் வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாக பாவூர்சத்திரம் திகழ்கிறது. இதன் அருகேயுள்ள ஆவுடையானூர், கொண்டலூர் பகுதிகளும் தொழில் வளர்ச்சிக்கு சிறந்து விளங்குவதால் ‘குட்டி சிவகாசி’ என  அழைக்கப்படுகிறது.  இங்கு வசித்து வரும் மக்களில் பெரும்பாலோனோர் விவசாயத்துக்கு அடுத்து   சாக்குபைகள் தயாரிக்கும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு தயாரிக்கப்படும் சாக்குகள் சென்னை,  தஞ்சை, தேனி, கம்பம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, திண்டுக்கல்,  மதுரை, ராமேஸ்வரம், தேனி, சாயல்குடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,  கர்நாடகா மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

கடந்த  5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாக்கு தைக்கும் தொழிலாளிகள் தினமும் தாங்கள் தைக்கும் சாக்குக்கு ஏற்ப குறைந்தபட்சம் ₹500 முதல் 1000 வரை கூலியாக பெற்று வந்தனர். சாக்கு வியாபாரிகளும் புதிய சாக்குகள் மட்டுமின்றி பழைய கிழிந்த  சாக்குகளையும் வீடு வீடாகச் சென்று வாங்கி வந்து விற்று வருவாய் ஈட்டி வந்தனர். நெல், பல்லாரி, சிறு வெங்காயம், பூசணி,  தடியங்காய்,  அவரைக்காய், சீனி அவரை போன்ற விவசாய சம்பந்தப்பட்ட பொருட்களை விவசாயிகள்  சாக்குகளில் வைத்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் வரவால் சாக்கு விற்பனையில் சரிவு ஏற்படத் துவங்கியது.
குறிப்பாக சாக்கு பைகளை விட பிளாஸ்டிக் பைகள் விலை மலிவாகவும், ஈரத்தை உறியாத தன்மையுடன் இருப்பதால் விவசாயிகள்  விவசாய பொருட்களை கொண்டுசெல்ல சாக்குகளை தவிர்த்து பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் பயன்படுத்தத் துவங்கினர்.

 இதனால் சாக்குகள் விற்பனை ஆகாமல் முடங்குவதால் சாக்கு தைக்கும் தொழிலும் நாளுக்கு நாள்  நலிவடைந்து வருகிறது. முன்பெல்லாம் ஆவுடையானூர், கொண்டலூரில்  200க்கும்  மேற்பட்ட சாக்கு தைக்கும் கடைகள் இருந்தன. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்  நலிவால் 25 கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அவையும் முழுமையாக செயல்படாமல் பகுதியளவிலேயே இயங்கி வருகின்றன. இதனால் சாக்கு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த  தொழிலாளர்கள் பிழைப்புக்காக கேரளாவில் பாத்திரம் விற்கவும், கட்டுமானத் தொழிலுக்கும் சென்று விட்டனர்.  மேலும் பல குடும்பத்தினர், பிழைக்க வழியின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற  மாநிலங்களுக்கு கூலி வேலைக்காக குடி பெயர்ந்துள்ளனர். இதற்கு முன்னர்  ஆவுடையானூர் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நடந்து வந்த சாக்கு வர்த்தகம், தற்போது பிளாஸ்டிக் பைகள் வரவால் முற்றிலும் நசிந்து  விட்டது.  பண பரிவர்த்தனையும் பாதியாகக் குறைந்து விட்டது.

‘தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் ’
சாக்கு வியாபாரி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘சாக்கு வர்த்தகம் கடந்த காலங்களில்  மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளும், அரிசி  வியாபாரிகளும் கூட பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் பயன்படுத்தும் நிலைக்கு மாறிவிட்டனர். இதனால் சாக்கு உற்பத்தி மற்றும் விற்பனை தொழில்  நலிவடைந்து விட்டது. உற்பத்தியான ஏராளமான சாக்குகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. நாளுக்கு நாள் நலிந்துவரும் சாக்கு வர்த்தகத்தால் வேறு என்ன தொழில் செய்வது எனத்தெரியாமல் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். பொதுவாக சாக்குகள் மக்கும் தன்மையுடையவை. மேலும் இயற்கைக்கு ஒருபோதும் கேடு விளைவிக்காதவை. ஆனால், அதற்கு நேர்மாறான பிளாஸ்டிக் பைகள் வரவால் நலிந்துவரும் சாக்கு உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களை போன்றவர்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற முன்வர வேண்டும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்