SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குனர் மீது நடிகை ராதிகா ஆப்தே பாலியல் புகார்: பெயர் வெளியிட மறுப்பது ஏன்?

2018-11-11@ 00:04:55

சென்னை: பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ‘’டோனி’’, ‘’வெற்றிச்செல்வன்’’, ‘’ஆல் இன் ஆல் அழகுராஜா’’, ‘’கபாலி’’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், தன்னிடம் தென்னிந்திய நடிகர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், பிரபல இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.  இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது: தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். தனது புதிய படத்தில் நடிப்பவர்களுக்கான ஆடிஷன் நடப்பதால், அதில் பங்கேற்கும்படி என்னை அழைத்தார். அப்போது நான் லண்டனில் நடந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை திரும்பியிருந்தேன். இயக்குனரின் அழைப்பை ஏற்று ஓட்டலுக்கு சென்றேன்.

அது மிகவும் அழுக்கடைந்த ஓட்டலாக இருந்தது. ஒரு அறையில் டெய்லர் உள்பட 12 பேருடன் இயக்குனர் அமர்ந்திருந்தார். உள்ளே சென்ற என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார். பிறகு ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.  இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. என்றாலும், விரைவில் ஆடிஷன் முடிந்துவிடும் என்று நினைத்து காத்திருந்தேன். பிறகு அந்த இயக்குனர் என்னை நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார். அவர் தன் படத்துக்காகத்தான் ஆடிஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அங்கிருந்து புறப்பட்டால் போதும் என்று முடிவு செய்து, எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு ெதாடங்கப்படவே இல்லை.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார். என்றாலும், அந்த இயக்குனர் யார்? படத்தின் பெயர் என்ன என்பதை கூறவில்லை. இதுபோல் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் கூறினாலும், அதன் பின்னணியில் யார், யார் இருந்தனர் என்பது பற்றி வெளிப்படையாக சொல்லாமல் மவுனமாக இருப்பது, திரையுலகில் ஒருசாரார் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்