SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடனை திருப்பி கேட்டதற்காக கொல்லப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு

2018-11-10@ 21:00:34

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட வாலிபர் உடல் இன்று பிரேத பரிசோதனைக்காக ஆந்திர போலீசாரால் தோண்டி எடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடு குப்பம் ஊராட்சி, ராமபத்திராசு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமன். இவரது மகன் கருணாமூர்த்தி (32). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் கடந்த ஞாயிறன்று ராமன் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன கருணாமூர்த்தி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ராமன் கொடுத்த தகவலின்பேரில்  வெள்ளாத்தூர், இருளர் காலனியைச் சேர்ந்த அரிபாபு (35) என்பவரது வீட்டுக்கு சென்றபோது, அவர் தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து திருத்தணியை சேர்ந்த 5 பழைய குற்றவாளிகளிடம் விசாரித்தபோது, நகரி அருகே  கே.வி.குப்பம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஒருவரின் உடலை மர்ம கும்பல் புதைத்ததாக தகவல் கிடைத்தது. அது, ஆந்திர மாநிலப் பகுதி என்பதால், அம்மாவட்ட வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதியுடன் சம்பவ இடத்தில் பிணத்தை தோண்டி எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கருணாமூர்த்தியின் உறவினர்கள் நேற்று நகரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை ஆந்திர போலீசாரால் கொசஸ்தலை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கருணாமூர்த்தி என்பதும், கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக கூலிப்படை மூலம் கருணாமூர்த்தி கொல்லப்பட்டதும் தெரியவந்தது. பின்னர், சடலத்தை ஆந்திர போலீசார் பிரேத பரிசோதனைக்காக நகரி அரசு மருத்துவமனையில்  அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்