SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரம் அருகே நள்ளிரவில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்

2018-11-10@ 19:58:03

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் புதுமாப்பிள்ளையை மர்ம நபர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் மலட்டாற்றங்கரையோரம் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததார். அவர் அருகில் ஒரு மோட்டர் பைக் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி சங்கர் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்த வாலிபர் விழுப்புரம் அருகே ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் கந்தன் (30) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவருக்கு சில மாதத்துக்கு முன்பு சத்யா என்ற உறவினர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. நேற்றிரவு வீட்டில் இருந்து அரசூரில் நடந்த நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் நள்ளிரவில் 12 மணியளவில் பைக்கில் வீடு திரும்பியபோது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திருப்பாச்சனூர் மலட்டாற்றங்கரையோரம் பின்பக்கமாக வெட்டியுள்ளனர். கந்தன் நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த தாலுகா போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே மு்ண்டியம்பாக்கம் மருத்துவமனையில் திரண்ட கந்தன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்