2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மக்களுக்கு வீடுகள் : அமித் ஷா உறுதி
2018-11-10@ 17:40:36

ராய்ப்பூர்: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு வீடுகள் வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியீட்டு அவர் உரையை நிகழ்த்தினார். முதலமைச்சர் ரமன் சிங் தலைமையில் சத்தீஸ்கர் மாநிலம் கடந்த 15 ஆண்டுகளாக முன்னேற்றத்தின் பாதையில் செல்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
நக்சல்கள் வழியில் காங்கிரஸ் கட்சி செல்வதாக குற்றம் சாட்டிய அமித் ஷா சத்தீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாதமும் ரூ.1-க்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. திங்கட்கிழமை 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2-ம் கட்ட தேர்தல் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படை அதிரடி
4ஜி சேவை உரிமம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தம்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை..... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய விமானப் படை வரலாற்றில் முதன் முறையாக விமானப்படை பொறியாளராக பெண் நியமனம்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது மோடி அரசு: மன்மோகன் சிங் சாடல்
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்