SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜோர்டானில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி

2018-11-10@ 16:52:46

ஜோர்டான்: ஜோர்டான் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்டானில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இடைவிடாது பெய்த மழையால் அந்நாட்டின் தாபா பகுதி கடுமையாக சதேமடைந்துள்ளது. பழம்பெரும் புராதான நகரான பெட்ராவில் 13 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தொடர்ந்து மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புராதான நகரான பெட்ராவுக்கு சுற்றுலா சென்ற 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் குவைத்தில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க ராணுவமும் தேசிய பாதுகாப்பு படையினரும் களமிறங்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்