SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.20 கோடி லஞ்ச பேர வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சரண்

2018-11-10@ 16:47:11

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சையத் அகமது பரீத் என்ற நிதிநிறுவன அதிபர், தன்னுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தப்பிக்க உதவுவதாக கூறி, பாரதிய ஜனதா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரூ.20 கோடி லஞ்ச பேரம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

20 கோடி ரூபாய்க்கு பதிலாக 57 கிலோ தங்கக் கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் ஜனார்த்தனரெட்டியை தேடி பல்லாரி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் தேடி வருகின்றனர். இந்நிலையில்,  இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க பெங்களூரு சிட்டி  சிவில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஜனார்த்தன ரெட்டி சார்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது பெங்களூரு நீதிமன்றம்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். பண மதிப்பிழப்பு நேரத்தில் தனது மகளுக்கு ரூ.600 கோடி செலவில் திருமணம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ஜனார்த்தன ரெட்டி. எடியூரப்பா ஆட்சி காலத்தில் கணிமவள அமைச்சராக இருந்த அவர், சுரங்க ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்