SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிஃபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ: குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதில் 9 பேர் உயிரிழப்பு

2018-11-10@ 15:46:24

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. கலிஃபோர்னியாவின் வடக்கில் பசிபிக் கடல் தூரத்தில் அமைந்துள்ள மாலிபு என்ற இடத்தில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் தீ பரவியது. இதனால் அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. ஏராளமான வீடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விமானங்களில் ரசாயண பொடியை தூவியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலிபு நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. இங்குள்ள 75,000 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சுக்கு அருகாமையில் அமைந்துள்ள வென்சுரா நகரில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாகின. வேகமாக பரவி வரும் தீயால் 14,500 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்து. மாலிபு, காலாவாசால் மற்றும் லாஸ் ஏஞ்சல்சின் மேற்கு பகுதியில் ஹாலிவுட் நடிகர்களின் வீடுகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் வீடுகள் அமைந்துள்ளன. அந்த வீடுகளில் உள்ள பலர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்