SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசை கண்டித்து தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதம் : 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் போராட முடிவு

2018-11-10@ 15:16:03

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாக புகார் தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண்டிபட்டியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தங்க தமிழ்செல்வனுடன் தொகுதி மக்களும் பங்கேற்றுள்ளனர். தகுதி நீக்கம் என்ற பெயரால் எம்.எல்.ஏ.க்களை புறக்கணித்தது போன்று வாக்களித்த மக்களையும் தமிழக அரசு புறக்கணித்து மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுவதாக தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண்டிபட்டி தொகுதி போன்றே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு ஒதுக்குகிறது என்று தங்க தமிழ்செல்வன் புகார் தெரிவித்தார். அந்தந்த தொகுதிகளில் 2 மாதங்களுக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்