SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலககோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவுக்கு முதலிடம் : கிரிக்கெட் வீரர் அஸ்வின்

2018-11-10@ 13:27:12

துபாய்:  துபாயில் டெசர்ட் கப்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் அகாடமி இணைந்து லீப் ஸ்போட்ஸ் ஆதரவுடன்  கிரிக்கெட் பயிற்சி மையம் செயல்படுகிறது. இதன் சிறப்பு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் அஸ்வின் செயல்படுகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியதாவது... துபாயில் இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவ திறமை மிகு இளம் மாணவர்கள் உள்ளனர் இவர்களிடம் கிரிக்கெட் திறமைகளை கண்டறிந்து பயிற்சியளிக்கும் விதமாக  இந்நிறுவனம் செயல்படும். வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முதலிடம் வகிக்கிறது. தற்போதைய அணிகளில் பலமான அணியாக இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது.



மேலும் இந்தியாவில் கிராம பகுதிகளில் கிரிக்கெட்டில் திறமைமிகு மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சியளிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்.இதற்கு தேவையான ஆதரவு கிடைக்குமானால் கிரிக்கெட் பயிற்சி நிலையங்கள் தொடங்கி இதனை  செயல்படுத்தலாம்.

சென்னை போன்ற நகரங்களில் இட நெருக்கடியால் கிரிக்கெட் பயிற்சிக்கான இடம் அமைவதில் சிரமம் ஏற்படுகிறது.இதனால் அதற்கான இடத்தை ஏறப்டுத்துவது எதிர்காலத்தில் பெரும் சவாலாக திகழும். என்றார். சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரமேஸ்  உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்