SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் நெருக்கடியை ஆழமாகும் : அமெரிக்க வெளியுறவுத்துறை

2018-11-10@ 10:11:55

வாஷிங்டன் : இலங்கை நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் அதேநாளில் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி நீக்கத்தை ஏற்க மறுத்துள்ள ரணில், 'நானே பிரதமராக நீடிக்கிறேன்' என்று அறிவித்தார். இதனை அடுத்து பிரதமர் பதவியை தக்கவைக்க ரணில் விக்கிரமசிங்கே - ராஜபக்சே இடையே கடும் போட்டி நிலவியது.

பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்று வெளியாகிய செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ஆழமாகும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்