SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனவரி 5-ம் தேதி தோ்தல்

2018-11-10@ 08:00:47

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு வரும் ஜனவரி 5-ம் தேதி தோ்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 19-ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 26 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜனவரி 17-ல் இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி நீக்கத்தை ஏற்க மறுத்துள்ள ரணில், 'நானே பிரதமராக நீடிக்கிறேன்' என்று அறிவித்தார். இதனை அடுத்து பிரதமர் பதவியை தக்கவைக்க ரணில் விக்கிரமசிங்கே - ராஜபக்சே இடையே கடும் போட்டி நிலவியது. இந்த பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்