SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திடீர் திருப்பம் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: கடும் எதிர்ப்பையும் மீறி அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு

2018-11-10@ 06:03:11

கொழும்பு: கடும் எதிரப்பையும் மீறி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கேவை நீக்கி விட்டு, ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பான்மை ஆதரவு இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என கூறிவந்த ரணில், ராஜபக்சே மீது நம்பிக்கையில்லாத தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதனிடையே, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கினார். ஆனால், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து நாடாளுமன்றத்தை 14ம் தேதி கூட்டப்படும் என அறிவித்தார்.

இதனிடையே, அதிக எம்.பி.க்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவை பெற அதிபர் சிறிசேனா பலமுறை முயற்சித்தார். இதற்காக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்பந்தனை நேரில் அழைத்து அதிபர் சிறிசேனா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் ரணிலுக்கு ஆதரவை வழங்கும் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இது ராஜபக்சேவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என வதந்தி பரப்பப்பட்டது. இதற்கிடையே, சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு கொழும்புவில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு பின் பேசிய அதிபர் சிறிசேனாவின் நெருங்கிய நண்பர் ரோகனா லட்சுமன் பியாதாசா, ‘‘அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு திடீர் தேர்தல் நடத்தப்படாது’’ என்று அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் 2020ம் ஆண்டு ஆகஸ்டில் தான் நிறைவுபெறும். ஆனால், அதற்கு முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 5ம் தேதி பொது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி வேட்புமனு தொடங்கும் எனவும்,  26ம் தேதி கடைசி ஆகும்.தேர்வு செய்யப்படும் புதிய உறுப்பினர்கள் ஜனவரி 17ம் தேதி பதவியேற்பார்கள். இதனிடையே, நாடாளுமன்ற கலைப்பை ஏற்க முடியாது என்று ரணில் விக்கரமசிங்கே அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம் மக்களின் உரிமைகளை அவர்கள் கொள்ளையடித்துவிட்டனர்” என அதிபர் மற்றும் ராஜபக்சேவை காட்டமாக விமர்சித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்