SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலதிபரிடம் 20.50 கோடி பேரம் ஜனார்த்தன ரெட்டி முன்ஜாமீன் மனு

2018-11-10@ 04:42:14

பெங்களூரு: பெங்களூரு கே.ஜி ஹள்ளி சரகத்திற்குட்பட்ட பகுதியில்  அமைந்துள்ளது அபிடன்ட் என்ற தனியார் நிதி நிறுவனம். இதன் உரிமையாளர் பரீத்.  நிதி மோசடியில் ஈடுபட்டார். இதனால், அமலாக்கத்துறையினர்  அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இருந்து பரீத்தை விடுவிக்க பாஜ.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரூ.20.50 கோடி பேரம் பேசியுள்ளார். இந்த தகவல்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரது பெங்களூரு, பல்லாரி வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை  பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில்,  இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க பெங்களூரு சிட்டி  சிவில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஜனார்த்தன ரெட்டி சார்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக உயர்  நீதிமன்றத்தில் புகாரை  ரத்து செய்யக்கோரி ஒரு மனுவும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முன்ஜாமீன் மனு வை நேற்று ஏற்றுக்கொண்ட  நீதிபதி, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்