SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீர் மாநில எல்லையில் 7 மாதத்தில் 1,435 தாக்குதல்

2018-11-10@ 04:41:19

ஜம்மு: காஷ்மீர் மாநில எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் 1,435 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,435 முறை துப்பாக்கிச்சூடு  நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்கள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர். 232 பேர் காயமடைந்தனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இந்த தகவல்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள மனஜாகோட் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் வீரர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர், இதற்கு இந்திய  வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்