SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் எம்.777 உட்பட ராணுவத்தில் புதிதாக 3 பீரங்கிகள் சேர்ப்பு

2018-11-10@ 04:40:34

தியோலாலி: அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்.777 இலகு ரக பீரங்கிகள் உட்பட 3 பீரங்கிகள் மற்றும் வாகனங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவத்தில் நேற்று இணைத்தார்.  ஈரான், ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க ராணுவம் எம்.777 இலகு ரக பீரங்கிகளை பயன்படுத்தியது. இவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் உயரமான இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இந்நிலையில், 145 எம்.777  பீரங்கிகளை அமெரிக்காவிடம் இருந்து ரூ.5,070 கோடிக்கு வாங்க கடந்த 2016ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த பீரங்கிகளை அமெரிக்கா இந்தியாவுக்கு சப்ளை செய்ய தொடங்கியுள்ளது. இவற்றை ராணுவத்தில்  சேர்க்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தியோலாலி என்ற இடத்தில் நேற்று நடந்தது.

இத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கே-9 வஜ்ரா டேங்க் மற்றும் ராணுவத்தில் தற்போது உபயோகத்தில் உள்ள பீரங்கிகளை  இழுத்துச் செல்லும் வாகனம் (சிஜிடிவி) ஆகியவையும் இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். முதல் பீரங்கி படைப்பிரிவில் அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் 18  எம்.777 ரக பீரங்கிகளும் கே-9 வஜ்ரா டேங்க்குகளும் இணைக்கப்பட உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்