SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் நொறுங்கும் அப்பள தயாரிப்பு தொழில்: பல லட்சம் தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறி?

2018-11-10@ 04:38:46

மதுரை: மூலப்பொருட்களின் விலை உயர்வால் தமிழகத்தில் அப்பளம் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் மதுரை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அப்பள தயாரிப்பு தொழில் நடந்து வருகிறது. சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும்  அப்பளங்கள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மேலும் பலர் உள்ளூர் கடைகளில் வாங்கி குறைந்த லாபத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஜிஎஸ்டிக்கு பிறகு அப்பளம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் நிர்ணயித்த விலைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் அப்பள தொழிற்கூடங்கள் முடங்கி கிடக்கின்றன. பல  தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த அப்பள தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க மாநிலத்தலைவர் திருமுருகன் கூறும்போது, ‘‘உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தால் மிகவும் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  உளுந்தம்பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தீபாவளிக்கு முன் ₹5 ஆயிரத்திற்கு விற்பனையான தீட்டல் பருப்பு, தற்போது ₹6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. முதல் தரம் மூட்டைக்கு 1,000 முதல் 2,000  வரையும், இரண்டாம் தரம் 1,000 முதல் 1,300 வரை விலை உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ற விலை அப்பளத்தில் கிடைக்கவில்லை. இதனால் அப்பளம் தொழில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள்  உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்