SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீலர் கமிஷன் அதிகரிப்பால் சென்னையில் மானிய சமையல் காஸ் சிலிண்டர் 1.52 உயர்வு: ஒரே மாதத்தில் 2வது முறை அதிகரித்தது

2018-11-10@ 04:37:59

புதுடெல்லி: டீசல் கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக மானிய சமையல் காஸ் சிலிண்டர் சென்னையில் ₹1.52 அதிகரித்து ₹495.39 ஆகியுள்ளது. டெல்லியில் ₹2.08 அதிகரித்து₹507.42 ஆக  உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்துக்காக ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்கு மேல் சந்தை விலையில் வாங்க வேண்டும். இதற்கான மானியம் வங்கிக்கணக்கில் வரவு  வைக்கப்படும். சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைக்கின்றன. கடந்த 1ம் தேதி சென்னையில் மானிய சிலிண்டர் ₹3.04 அதிகரித்து ₹493.87க்கு விற்கப்பட்டது. டெல்லியில் ₹505.34 கொல்கத்தாவில் ₹508.70    மும்பையில் ₹503.11 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், டீலர்  கமிஷன் உயர்த்தப்பட்டதால் சிலிண்டர் விலை ஒரே மாதத்தி–்ல் 2வது முறையாக அதிகரித்துள்ளது.

டீலர் கமிஷன் உயர்வு குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 14.2 கிலோ சிலிண்டருக்கான புதிய டீலர் கமிஷனாக நிறுவுதல் கட்டணம் ₹30.08, டெலிவரி கட்டணம் ₹20.50 என உயர்த்தப்படுகிறது. 5 கிலோ  சிலிண்டருக்கு நிறுவுதல் கட்டணம் ₹15.04, டெலிவரி கட்டணம் ₹10.25 வழங்கப்படும். நேரடியாக ஏஜென்சியில் சென்று சிலிண்டர் பெற்றுக்கொள்பவர்களுக்கு டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் டீலர் கமிஷன் உயர்த்தப்பட்டது. அப்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு நிறுவுதல் கட்டணம் ₹29.39 டெலிவரி கட்டணம் ₹19.50 என இருந்தது. 5 கிலோ சிலிண்டருக்கு இந்த கட்டணம  ்முறையே ₹14.70 மற்றும் ₹9.50 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 அடிப்படை விலைக்கான ஜிஎஸ்டி செலுத்தப்படுவதால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாத உயர்வுடன் சேர்த்து சென்னையில் 6 மாதத்தில் சிலிண்டருக்கு ₹15.97  உயர்ந்துள்ளது.  டெல்லியில் ₹16.21 அதிகரித்துள்ளது. புதிய டீலர் கமிஷன்படி சென்னையில் 14.2 கிலோ மானிய  சிலிண்டர் ₹1.52 அதிகரித்து ₹495.39ஆகவும், டெல்லியில் ₹2.08 அதிகரித்து ₹507.42 ஆகவும் உள்ளது.  இதுபோல் வர்த்தக சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் ₹3.50 உயர்ந்து ₹1,702 ஆகவும், டெல்லியில் ₹8 உயர்ந்து ₹1614.50 ஆகவும் உள்ளது.ஒரே மாதத்தில்  2வது முறையாக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு சென்னையி–்ல் டெலிவரி கட்டணமாக 19.50 இருந்தது. இது 20.50ஆக அதிகரித்துள்ளது. சிலிண்டரை ஏஜென்சிக்கே சென்று எடுத்து வந்தால் டெலிவரி கட்டணம் கிடையாது. எனவே,  ஏஜென்சிக்கு அருகில் இருப்பவர்கள், அல்லது டூவீலரில் சென்று எடுத்து வர முடிந்தால் இந்த கட்டணத்தை மிச்சப்படுத்தலாம். அதோடு, வீட்டுக்கு வந்து டெலிவரி செய்பவர்கள் கட்டாயமாக சிலிண்டருக்கு ₹50 வரை கூடுதலாக  வசூலிக்கின்றனர். இந்த அடாவடியை மக்கள் புகார் செய்ய தயங்குகின்றனர்.நேரடியாக சென்று டெலிவரி எடுத்தால் டெலிவரி செய்பவர்களின் அடாவடி வசூலில் இருந்தும் தப்பலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்